ஸ்டேஜில் கனாக்காணும் காலங்கள் பிரபலங்களின் செய்த அட்டகாசங்கள் – இணையத்தில் வைரல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த கனாக்காணும் காலங்கள் சீரியல் மீண்டும் ரீயூனியன் நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

கனாக்காணும் காலங்கள்

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சீரியல்களில் கனாக்காணும் காலங்களும் ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. பள்ளி கல்லூரி வாழ்க்கையை விட பள்ளி வாழ்கை தான் அதிக புகழ் பெற்றது.

அதில் நடித்த ராகவி, இர்ஃபான், பாண்டி, பச்சை போன்றோரை தற்போது வரை யாராலும் மறக்க முடியாது. பலரின் பள்ளி வாழ்க்கையை இந்த சீரியல் தான் நியாபகப்படுத்தியது. மேலும் தற்போது மீண்டும் அந்த எபிசோடுகளை வெளியிட்டால் கூட முதல் தடவை பார்ப்பது போல தான் இருக்கும்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த சீரியல் இடம் பெற்றுள்ளது. தற்போது விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் ரீயூனியன் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனால் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவிக்கு கம்பேக் கொடுத்த தீபக் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

மறுபடியும் விஜய் டிவியில் பழைய பிரபலங்கள் எல்லாம் ரீஎன்ட்ரி கொடுத்து இருப்பது எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. எப்படியும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய பொழுதுபோக்கு காத்து கொண்டுள்ளது மட்டும் தெரிகிறது. இந்நிலையில் இந்த கனாக்காணும் காலங்கள் ரீயூனியன் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அனைவரும் இணைந்து ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here