உலகின் மிக காஸ்ட்லியான Golden Boy பர்கர் அறிமுகம்… விலையை கேட்டா மயக்கம் வந்துரும்!!!

0

நெதர்லாந்தை சேர்ந்த உணவக உரிமையாளர் உலகின் விலை உயர்ந்த பர்கரை செய்துள்ளார். அதன் விலை ரூ. 4,41,305 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பர்கர் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நெதர்லாந்தை சேர்ந்த உணவகமான ராபர் ஜேன் டி வீன் ஆஃப் டி டால்டன்ஸ் உணவக உரிமையாளர் உலகின் விலை உயர்ந்த பர்கரை தயாரித்துள்ளார். இதன் விலை 5000 யூரோக்கள். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 4 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய். இதற்கு ‘The Golden Boy’ என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த பர்கரை அதே நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

இதில் கிடைத்த பணத்தை ஒரு என்ஜிஓ அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பர்கரில் தங்க துகள்கள், கேவியர், வாய்யூ பீப், குங்கும பூ, போன்ற விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதில் சேர்க்கப்பட்ட பல பொருட்கள் மார்க்கெட்டில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஆகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here