நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைத்த வண்ணம் உள்ளனர். அதன்படி ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தவும் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே இதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்ட தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.