ஆப்பிளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் களமிறக்கிய விண்டோஸ் 11.. என்னென்ன சிறப்பம்சங்கள்??

0
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஐ அறிமுகப்படுத்தியது. தற்போது இதற்கு அடுத்த வெர்ஷனான விண்டோஸ் 11 ஐ அறிமுகம் செய்துள்ளது.

விண்டோஸ் 10 உடன் ஒப்பிடும் போது நிறைய மாற்றங்கள், பல புதிய அம்சங்களை வின்டோஸ் 11 இல் அமைந்து இருக்கிறது. இந்த புதிய விண்டோஸ் 11 வெர்ஷனில் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் இல்லாமல் உள்ளது. அதோடு டாஸ்க் பாரில் ஐகான்களை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதியும் இந்த வெர்ஷனில் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் Taskbar Icons நடுப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

Microsoft Teams App ஐ வின்டோஸ் 11 வெர்ஷனில் இடம்பெற்று உள்ளது. Microsoft Teams என்பது Zoom, Google Meet போன்ற அப்ளிகேஷன் ஆகும். மேலும் கேம் பிரியர்களுக்காக DirectX 12 , Auto HDR , Xbox Game Pass போன்ற அம்சங்களை புகுத்தியுள்ளனர். விண்டோஸ் ஸ்டாரிலும் புதிய மென்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வின்டோஸ் 11 பற்றிய பிரத்யேக வீடியோவை ஏற்கனவே மைக்ரோசொப்ட் வெளியிட்டுள்ளது.

நீங்கள் மைக்ரோசாப்ட் பயனர் எனில், மேலும் உங்களிடம் விண்டோஸ் 10 வெர்ஷன் இருக்கும் பட்சத்தில்  உங்களுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டேமை அப்டேட் செய்வதன் மூலமாக இலவசமாக விண்டோஸ் 11 ஐ கணணியில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு முன்பு உங்களுடைய கணினி விண்டோஸ் 11 ஐ சப்போர்ட் செய்யுமா என்பதை சோதித்து கொள்வது முக்கியம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here