மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு – ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு..!

0
NEET Exam 2020
NEET Exam 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு குறித்த ஆய்வறிக்கையை நீதிபதி கலையரசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் திங்கள் கிழமை அன்று தலைமைசெயலகத்தில் அளித்தார்.

நீட் தேர்வு:

நீட் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கே மருத்துவ படிப்புகள் ஆன எம்.பி.பி.இஸ் மற்றும் பி.டி.இஸ் மூலமாகவே இட ஒதுக்கீடு தர படுகிறது. இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக குறைந்து உள்ளது. நீட் தேர்வு கடுமையாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு:

இதனிடையில் நீட் தேர்விலும் கடுமையாக படித்து தேர்ச்சி பெரும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக முதல்வர் பழனிசாமி அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்க்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நீதிபதி கலையரசன் அவர்கள் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைத்தனர். இந்த குழு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து அரசுக்கு வழங்க திட்டமிட்டது.

சமர்ப்பித்த அறிக்கை:

இதன் முடிவாக நீதிபதி கலையரசன் தலைமையில் ஆன குழு திங்கள்கிழமை ஆண்ட்ரு ஒரு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை வழங்கும் போது பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறையின் செயலர் தீரஜ் குமார் ஆகியோர் இருந்தனர்.

நீட் தேர்வுக்கு முன் அறிவிப்பு:

இந்த இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் நீட் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக அறிவிக்க படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இன்னும் சில நாட்களில் நீட் தேர்வுகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here