பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.., ஒப்புதல் வழங்கி முதல்வர் அதிரடி!!!

0
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.., ஒப்புதல் வழங்கி முதல்வர் அதிரடி!!!
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு.., ஒப்புதல் வழங்கி முதல்வர் அதிரடி!!!

ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் மகப்பேறு என்பது முக்கியமான ஒன்று. அந்த நேரத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் ஓய்வும் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆனால் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வு என்பதே குறைவு தான். இதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க ஒரு சில மாநிலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நிரந்தர பெண் ஊழியர்களுக்கு சில மாநிலங்களில் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு தற்போது மகப்பேறு வழங்கும் திட்டத்திற்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்., ஊதிய நிர்ணயம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு?

அதன்படி இந்த பெண்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அத்துடன் இவர்களுக்கான ஊதிய தொகை விடுப்பில் செல்வதற்கு முன் பெறப்பட்ட ஊதிய தொகைக்கு சமமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகள் வரை பிறந்தால் இந்த விடுமுறை வழங்கப்படும் என கூறியுள்ளனர். இந்த அறிவிப்பால் ஒப்பந்த பெண் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here