லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
குட்டி ஸ்டோரி விஜய்..!
நடிகர் விஜய்க்கும் குட்டி ஸ்டோரிக்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஒவ்வொரு படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டிக் கதை சொல்வது விஜயின் வழக்கம். அந்த வகையில் பிகில் விழாவில் அவர் பேசியது அரசியல்வாதிகள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் குரலில் வெளியான ‘ ஒரு குட்டி ஸ்டோரி’ பாடலும் பட்டிதொட்டி எங்கும் பட்டய கிளப்பியது.
ஐடி ரெய்டுக்கு அடுத்து..!
சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற ஐடி ரெய்டு தமிழ் சினிமா மற்றும் அரசியலில் பெரிய பேச்சுப்பொருளாக உருவெடுத்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் இது குறித்து குட்டி ஸ்டோரி சொல்லுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |