கொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் முகக்கவசம் விரைவில் கட்டாயமாக்கப்படும்., திடுக்கிடும் தகவல்!!!

0
கொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் முகக்கவசம் விரைவில் கட்டாயமாக்கப்படும்., திடுக்கிடும் தகவல்!!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக கவசம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் கொரோனா:

தமிழகத்தில் சமீப காலமாக இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து காய்ச்சல் முகாம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தலையெடுக்க தொடங்கியுள்ளது. இதன்மூலம் திருச்சியை சேர்ந்த இளைஞர் அண்மையில் உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது 2 வருடமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே முக கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் இன்று மட்டும் நாட்டில் 3,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த தகவல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால் தடுப்பு நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பணி நிரந்தரம் வழங்காதது ஏன்?? வாக்குறுதி என்னாச்சு?? பகுதிநேர ஆசிரியர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை!!

இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்படும்.” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் அடுத்தகட்ட தாக்குதலை ஆரம்பிச்சுருச்சோ? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here