திராவிட இயக்கத்தின் பிதாமகனான பண்டிதர் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் – முதலமைச்சரின் புதிய அறிவிப்பு!!!

0

வட சென்னையில்  திராவிட இயக்கத்தின் பிதாமகனான பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அயோத்தி தாசர்:

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  ஆதி திராவிடர்களின் பின்னணியில் இருந்து வந்தவர் அயோத்தி தாசர். மேலும் இவர் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்க்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்.  அயோத்தி தாசர் தமிழகத்தில் முதல் சாதி எதிர்ப்புப் போராளியாகவும், சமூக சேவராகவும், சித்த மருத்துவர்கவும் இருந்தார் என்றும் கூறிக்கொண்டே போகலாம்.

அதுமட்டுமல்லாமல் திராவிட இயக்கதின் ஆரம்ப காலகட்டத்தில்  அயோத்தி தாசரும் ஒருவராக இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவரை பெருமைபடுத்தும் விதமாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஓன்றினை அறிவித்துள்ளார். அதில் தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழி புலவர் அயோத்தி தாசப் பண்டிதர் என முதல்வர் அவரை பெருமைபடுத்தியுள்ளார்.

மேலும் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அயோத்தி தாசரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு சட்டப்பேரவையில் இருந்த விடுதலை சிறுத்தைகள், பாமக, வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும் வரவேற்பை தந்துள்ளனர்.

மேலும்  மணிமண்டபமானது எந்த இடத்தில் அமைக்கப்படும், எத்தனை கோடி செலவில் கட்டப்படும் என்பது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here