ஜீ தமிழ் ரசிகர்களின் கவனத்திருக்கு… முக்கிய சீரியல்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!!

0

டாப் சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழ் பல மக்கள் விரும்பும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலின் முக்கிய மூன்று சீரியல்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் செம்பருத்தி, நீதானே எந்தன் பொன்வசந்தம் மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட சீரியல்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது புது புது சீரியல்களை தங்களின் சேனல்களில் இறக்கி TRP ரேட்டிங்கை அதிகரித்து வருகின்றன பல சேனல்கள். அதில் எப்பொழுதும் டாப்பில் இருக்கும் டிவி சேனல்கள் விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி ஆகியவை ஆகும். மேலும் இந்த வகை டிவி சேனல்கள் தங்களின் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் முடியும் முன்பே அந்த இடத்தை நிரப்ப ஒரு புது சீரியலை இறக்கி விடுகின்றன.

அந்த வகையில் தற்போது விஜய் டிவி, தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியலை கடந்த மாதம் முதல் ஒளிபரப்பி வருகிறது. அதேபோல் ஜீ தமிழ் டிவியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நினைத்தாலே இனிக்கும் என்ற புது சீரியலை இரவு 7.30 மணி அளவில் ஒளிபரப்பி கொண்டு வருகிறது. இதற்காக ஒரு சில சீரியல்களின் நேரத்தையும் மாற்றி  உள்ளது.

இந்நிலையில் மீண்டும் சில சீரியல்களின் நேரத்தை மாற்றியுள்ளது. அதாவது தினமும் இரவு 9  மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் இனி இரவு 9 மணி முதல் 10 வரை ஒரு மணி நேரமாகவும், 9.30 மணிக்கு ஒளிபரப்பான ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் இனி 10 மணிக்கும், 10 மணிக்கு ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் 10.30மணிக்கும் வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த செம்பருத்தி சீரியல் முடியும் தருவாயில் இருப்பதால் இந்த நேர மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here