வலிமை ஷூட்டிங் முடிந்த கையுடன் அஜித் போட்ட முதல் திட்டம் – Wow சொன்ன ரசிகர்கள்!!

0

வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நேற்று நிறைவு பெற்றதை அடுத்து, இந்தியா திரும்பும் முன் சுமார் 5000 கிலோ மீட்டர் Bike Ride செய்ய நடிகர் அஜித் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வையின் இயக்குனர் H.வினோத் இப்படத்தை இயக்குக்கிறார். கொரோனா காலமாக இப்படத்தின் ஷூட்டிங், அப்டேட் எல்லாம் தடைபட்டு அஜித் ரசிகர்கள் உலக அளவில் வலிமை அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்தது நம் அனைவர்க்கும் தெரியும்.

சமீபத்தில் தான் சில முக்கிய காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு. மேலும் எடுக்கப்படாமல் இருந்த படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகளை எடுக்க படக்குழு சென்ற மாதம் ரஷ்யா சென்றனர். இந்நிலையில், ’வலிமை’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

எனவே தல அஜித் இந்தியா திரும்பும் முன் 5000 கி.மீ பைக் ரைடு செய்ய திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here