புரட்டாசியில் கடவுளின் அருளை பெற வேண்டாமா??? அப்போ இந்த விசேஷ நைவேத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!!!

0

தமிழ் மாதத்தில் புரட்டாசி ஆரம்பித்தாலே தொடர்ச்சியாக விழாக்கள் வர தொடங்கி விடும். அதில் நவரத்தி வந்து விட்டால் தினமும் கடவுளுக்கு ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்து படைப்போம். இந்நிலையில் தற்போது இந்த பதிவில் கடவுள் முருகனுக்கு மிகவும் பிடித்த மாம்பழ காடி அல்லது மாம்பழ பால் செய்முறையை காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்

மாம்பழம் – 3

பச்சரிசி மாவு – 2 கப்

தேங்காய் துருவல் – 1 கப்

சுக்கு தூள் – 1 தேக்கரண்டி

வெல்லம் – 1/2 கிலோ

செய்முறை

முதலில் வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி மணல் இல்லாதவாறு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு கழுவி நறுக்கி வைத்து உள்ள மாம்பழத் துண்டுகளை அதில் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

அதன் பின்னர் பச்சரிசி மாவில் தண்ணீர் சேர்த்து அதை கெட்டி இல்லாமல் கலக்கி வைத்துக் கொண்டு அதை கொதித்து வரும் வெல்லம் மற்றும் மாம்பழ கலவையில் சேர்த்து கட்டி வராமல் கிளறிக் கொண்டே இருக்கவும், மாவு வெந்து வரும் நேரத்தில் சுக்கு தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி விட்டு இறக்கி விடவும். தற்போது சுவையான மனமான மாம்பழ காடி அல்லது மாம்பழ பால் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here