மம்முட்டியின் மனைவியா இவர்… அப்படியே துல்கர் சல்மானை உரிச்சு வைச்சுருக்காங்க பாருங்களே!!!

0

மலையாள மொழி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி அவர்கள். இவர் 1980 ஆம் ஆண்டு சல்பாத் குட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு துல்கர் சல்மான், குட்டி சுருமி என்ற இரு பிள்ளைகள் உள்ளார். தற்போது மம்முட்டியின் மனைவி சல்பாத்  புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படம்  வைரலாகி வருகிறது.

மம்முட்டி அவர்கள் 1971ஆம் ஆண்டு முதல் திரை உலகில் மிகுந்த புகழ் உடன் வலம் வருகிறார். அவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த தளபதி படம் பல சாதனைகளை படைத்த ஒன்று. இது போன்ற இவரின் பல தமிழ் படங்கள் தமிழில் நல்ல  வரவேற்பை பெற்றன. மேலும் அவருக்கு தமிழும் பல தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இவரின் மகன் துல்கர் சல்மான் அவர்களும் திரையில் தன் முத்திரையை பதித்து வருகிறார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் இவருக்கு முதல் படம் வாயை மூடி பேசவும் என்ற படம் தான். மேலும் இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் கூட தமிழ் மொழியில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளார்.

இந்நிலையில் இன்று துல்கர் சல்மான், அவரின் 35வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது அவர் அம்மா சல்பாத் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here