தினசரி தொற்று எண்ணிக்கை 4000க்குள் வரும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் – மலேசிய அரசு அறிவிப்பு!!!

0

மலேசியா அரசு, அந்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4000க்குள் குறையும் வரை ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகள் கூட இரண்டாம் அலையயை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். தற்போது உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரசால் மூன்றாம் அலையும் ஏற்படும் அபாயமும் நிலவி வருவதால் ஊரடங்கை தளர்த்துவதில் சில உலக நாடுகள் தயக்கம் காட்டிவருகின்றனர்.

 

தற்போது மலேசிய அரசும் ஊரடங்கு குறித்து நாட்டுமக்களுக்கு சற்று வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது, மலேசியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 4000 க்குள் வரும் வரை ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதை அந்நாட்டின் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

தற்போது வரை மலேசியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 5000 க்கும் மேல் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அங்கு 5,586 ஆக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here