அஜித்தின் துணிவு படத்தில் இணையும் மலையாள பிரபலம்.,, அப்போ கண்டிப்பா ஒரு சம்பவம் இருக்கு!!

0

ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இந்த படத்தில் புதிதாக ஒரு மலையாள நடிகர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அப்டேட்:

தென்னிந்திய திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர், அஜித் குமார். கடைசியாக இவரது நடிப்பில் வலிமை என்ற படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாக ‘துணிவு’ உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கோக்கன், வீரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலகளான பாவனி, அமீர், சிபி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது பாங்காக்கில் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

மேலும் படத்தின் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இப்போது ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது,பிரபல மலையாள நடிகர் சிஜாய், துணிவு திரைப்படத்தில் நடித்து வருவதாக செய்தி வைரலாகி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக , நடிகர் சிஜாய்யும் தாய்லாந்து தீவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு, தமிழ் திரைப்படத்தில் act செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here