அப்பாவான பிக் பாஸ் பிரபலம் – குவியும் வாழ்த்துகள்!!!

0

பிக்பாஸ் பிரபலமான  மஹத்  பிராச்சி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்தார், தற்போது பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக இருந்த நிலையில், இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அப்பாவான பிக் பாஸ் பிரபலம்:

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் மஹத். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தற்போது, ‘கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா’ , ‘ இவன் உத்தமன்’ ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.

இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. மஹத் ராகவேந்திரா மற்றும் பிராச்சி மிஸ்ரா ஆகியோர் நேற்று காலை ஒரு ஆண் குழந்தையின் பெற்றோரானார்கள்.

முதல் குழந்தையை வரவேற்பதில் மகிழ்ச்சியடைந்த மகத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த கிக்கி விஜய், சுப்ரா ஐயப்பா, காயத்ரி ரகுராம், யாஷிகா ஆனந்த் மற்றும் பிக் பாஸ் தமிழ் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா போன்றவர்கள் மகத் – பிராச்சி தம்பதியை வாழ்த்தினர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here