திருமண மஹால்.. ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் இது கட்டாயம் இருக்கணும் – சென்னை மாநகர ஆணையர் உத்தரவு!!

0

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என மாநகர ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பகிரங்க எச்சரிக்கை:

தமிழகத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் மிக அதிகமாக உள்ளது. இதனால், தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு 100 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருமண மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் அரசின் வழிமுறைகள் பின்பற்ற படுகிறதா என்பதை ஆய்வு செய்வது குறித்து சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் பேசிய, மாநகராட்சி ஆணையர் கல்யாண மண்டபங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்ற பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், நகரில் உள்ள மஹால்களில் நடக்கும் திருமணங்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபட வேண்டும் எனவும், இந்த தகவலை வைத்து சம்பவ இடத்திற்கு வரும் அதிகாரிகள் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்வர். இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத இடங்களுக்கு கண்டிப்பாக சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here