மதுரை மாநகர் வாகன ஓட்டிகளே., இந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்? முழு விவரம் உள்ளே..

0
மதுரை மாநகர் வாகன ஓட்டிகளே., இந்த வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்? முழு விவரம் உள்ளே..

தமிழகத்தில் பண்டிகை, திருவிழா உள்ளிட்ட தினங்களில் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (மார்ச் 28) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 29) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி,

  • திருநகரில் இருந்து மதுரைக்குள்ளும், மதுரையில் இருந்து திருநகருக்கும் சென்று வருவதற்கு GST சாலையில் மூட்டா தோட்டம் வழியாக செல்ல வேண்டும்.
  • திருநகரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள், பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலி இடத்திலும் திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் உள்ள கட்டண வாகன நிறுத்தத்திலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
  • மதுரையில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள், ஒக்கலிகர் மண்டபம் அருகே உள்ள கட்டண பார்க்கிங்-கில் நிறுத்த வேண்டும். இருசக்கர வாகனங்கள் என்றால் திருப்பரங்குனறம் ஆர்ச்சிலிருந்து மயில் மண்டபம் வரை சாலையின் இருபுறங்களிலும் Single பார்க்கிங்-ஆக நிறுத்தலாம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான சூப்பர் டூப்பர் நியூஸ்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here