தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேண்டுகோள்!!

0

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை ஏற்ப்படுத்தினால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகில் மதுபானக்கடை அமைக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்த பொதுமக்கள் பலரும் பள்ளிக்கு அருகிலுள்ள மதுக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மேலூரில் பள்ளிக்கு அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றக் கிளை, ‘பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வைக்க அது மளிகைக் கடையோ அல்லது புத்தகக் கடையோ இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழக இடைக்கால பட்ஜெட் – பிப்ரவரி 23இல் துணை முதல்வர் தாக்கல்!!

ஒட்டுமொத்த தமிழகமும் மதுவில் மூழ்கியுள்ளது. மாநில அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை’ என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மது விற்பதன் மூலம் மாநில அரசுக்கு வருமானம் அதிகமாக கிடைப்பதால் மாநில அரசுக்கு மதுவிலக்கு குறித்த எந்த கவலையும் இல்லை. பூரண மதுவிலக்கை ஏற்ப்படுத்தினால் சமூகத்தில் குற்றங்கள் குறையும், தனிநபர் வருவாய் உயரும், உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here