சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்துமழை!

0
சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சிக்கல் - பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்., வெளியான பகீர் பின்னணி!!

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான மாவீரன் படத்தில் அவருக்கு தங்கச்சி கதாபாத்திரத்திற்கு விஜய் டிவி பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவீரன் படம்:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அவர் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா படத்தில் கதாநாயகனாக வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

SivaKarthikeyan Maaveeran Mahaveerudu Movie Tittle Announcement Video

அதன் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். இவரின் நகைச்சுவையால் குழந்தைகளை கவர்ந்துள்ளார். தற்போது வெளியாகிய டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து அடுத்து ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகியுள்ள நிலையில் தற்போது மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவருக்கு தங்கச்சி கதாபாத்திரத்திற்கு விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான KPY வில் கலந்து கொண்டு பிரபலமானவர் Monisha Blessy. தற்போது இவர் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here