பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு.., இனிமேல் இந்த ரூல் கட்டாயம் – வெளியான முக்கிய தகவல்!!

0
பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு.., இனிமேல் இந்த ரூல் கட்டாயம் - வெளியான முக்கிய தகவல்!!
பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு.., இனிமேல் இந்த ரூல் கட்டாயம் - வெளியான முக்கிய தகவல்!!

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நேரு மைதானத்தில் நேற்று ஜூலை 9ம் தேதி நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. கடந்த மாதம் ஜூலை 28ம் தேதி ஆரம்பித்த இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த போட்டிக்கு 88 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடந்து முடிந்த நிறைவு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட தலைமை செயலாளர் இறையன்பு வெற்றி பெற்றவர்களையும் வாழ்த்தியும் மற்றும் சில தகவல்களையும் தெரிவித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது அவர் கூறியதாவது, செஸ் போன்ற அறிவுக்கு சம்பந்தமான விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை முன்னதாக ஆர்மீனியா நாட்டில் உள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் செஸ் விளையாட்டில் பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here