பாலிவுட்டில் தடம் பதிக்கும் பிரதீப் ரங்கநாதன்.., ஒரே படத்துல ஓஹோன்னு வளந்துட்டாரப்பா – இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

0
பாலிவுட்டில் தடம் பதிக்கும் பிரதீப் ரங்கநாதன்.., ஒரே படத்துல ஓஹோன்னு வளந்துட்டாரப்பா - இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
பாலிவுட்டில் தடம் பதிக்கும் பிரதீப் ரங்கநாதன்.., ஒரே படத்துல ஓஹோன்னு வளந்துட்டாரப்பா - இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

லவ் டுடே:

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்திலேயே பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே.திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது. அதுபோக இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

வெறும் 8 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்த , வசூலில் சக்கபோடு போட்டு தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளி குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து படக்குழு வெளியிட்டது. தெலுங்கிலும் மெகா ஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது என சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

பாரதிக்கு அப்படி ஒரு gift கொடுத்த கண்ணம்மா.., சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா சீசன் 2!!!!

இந்நிலையில் தற்போது ஹிந்தி ரீமேக் படத்தில் லவ் டுடே திரைப்படத்தின் ஹீரோவாக அமீர் கான் மகன் நடிக்கிறாராம். .அதே போல் ஹீரோயினாக ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது இதுகுறித்த இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here