லோகேஷின் Fight Club .., பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
லோகேஷ் தயாரிப்பில் விஜய் குமார் கேங்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்சம் காலத்திலே ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக இருந்து வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும்,வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 620 கோடி வசூல் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து லோகேஷ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ் G squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். மேலும் இவர் தற்போது விஜய் குமார் இயக்கி நடிக்கும் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு Fight Club என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here