மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி அறிவுப்பு!!

0

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருவதால் மாநிலங்களில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்த பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

முழு ஊரடங்கு:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிய உச்சமாக கொரோனா நோய்த்தொற்று 4 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோல் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சில தினங்களாக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி அந்த மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய்த்தொற்று 17,532 பேரை பாதித்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,182 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் அங்கு முழு ஊரடங்கு நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா பேரிடர் எதிரொலி – கல்லூரிகளில் கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது! ஏஐசிடிஇ அதிரடி!!

corona

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக அங்கு மதசார்ந்த வழிபட்டு தளங்கள் தொடர்ந்து மூடப்படும் என்றும் அவசர பணிகளுக்கு மற்றும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே சரக்கு வாகனத்திற்கு மட்டும் அனுமதி என்றும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here