கொரோனா பேரிடர் எதிரொலி – கல்லூரிகளில் கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது! ஏஐசிடிஇ அதிரடி!!

0

நாட்டில் கொரோனா நோய்பரவல் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக தற்போது கல்விக்கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

கல்விக்கட்டணம்:

நாட்டில் ஒரு ஆண்டு காலமாக கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று காரணமாக தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது தொற்று காரணமாக நாட்டில் பல கட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் பொருளாதார நிலையும் சற்று மோசமான நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை செலுத்த கல்வி நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு கட்ட மாணவர்கள் கடும் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சம் – ஒரே நாளில் 4,14,188 பேர் பாதிப்பு!!

இதனை தடுக்கும் வகையில் ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றின் நிலை இயல்புக்கு திரும்பும் வரை கல்வி கட்டணத்தை செலுத்த கட்டாய படுத்த கூடாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here