பயனற்ற ஊரடங்கு எதற்கு?? பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு ஆணை!!

0

கொரோனா தொற்று தாக்கத்தினை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.  அதில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர முழு ஊரடங்கு பெரும் பங்குவகிக்கிறது. பயனற்ற ஊரடங்கை ரத்து செய்ய கூறிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு:

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையில் காணப்படுகிறது. மேலும் கொரோனோ தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், பாதுகாப்பாக இருப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அனால் துவக்கத்தில் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் பயனற்ற ஊரடங்கு எதற்கு என அதனை ரத்து செய்ய கோரி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!


ஞாயிறு முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் அனைவரும் சனிக்கிழமை பொது இடங்களில் கூட்டம் கூடுவதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதும் கொரோனா தோற்று அதிகரிக்க வாய்ப்பாக அமையும் எனவும் மேலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதனால் பயன் ஏதும் இல்லை எனவும் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. கொரோனா தடுப்பு பணிகள் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாக கருதி அதனை ரத்து செய்யும்படிக்கு வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே இது குறித்த விளக்கமும் பதில்களும் அளிக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. விரைவில் மத்திய, மாநில அரசு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here