ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஒரு மாத காலமாக மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு தினத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் அனைவரும் பீதி அடைந்து வருகின்றனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நோயாளிகளின் கூட்டம் மருத்துவமனைகளில் அலைமோதி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் தற்போது சென்னையில் ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கும் விழா – மே 7 காலை 9 மணிக்கு துவக்கம்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் அங்கு தற்போது 95% படுக்கைகள் நிரம்பியுள்ளன. அங்கு சுமார் 1200க்கும் அதிகமானவர்கள் கொரோனவிற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு படுக்கைகள் ஒதுக்க காலம்தாமதம் ஏற்படுகிறது என்று நோயாளிகள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலினால் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here