தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

குமரிக்கடல் பகுதிகளில் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று(மே 5) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கும் வாப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

06.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு இப்படி ஒரு அம்மா பாசமா?? விடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்!!

07.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 08.05.2021 மற்றும் 09.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆம்புலன்ஸில் நீண்ட நேரமாக காத்திருக்கும் கொரோனா நோயாளிகள் – படுக்கை வசதி இல்லாததால் ஏற்படும் அவலம்!!

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுராலகோடு, சங்கரன்கோவில் தலா 7, பேச்சிப்பாறை 6, திண்டுக்கல், சிவலோகம், தாராபுரம், மணல்மேடு தலா 4, சூலூர், ராசிபுரம், குடவாசல், காட்டுமன்னார் கோவில் தலா 3, தேக்கடி, ராயக்கோட்டை, கரூர், பரமத்தி தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.. கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here