
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் சர்வதேச 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடரை கருத்தில் கொண்டே சர்வதேச அணிகள் அனைத்தும் ஒரு நாள் வடிவிலான தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் இந்த தொடருக்கான அணிகளே அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் அறிவிக்க வேண்டும் என ஐசிசி முன்னரே அறிவித்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்படி, பிசிசிஐ ஆனது செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவின் முதன்மை அணியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு ஐசிசியானது, தொடரில் சிறந்து விளங்கும் வீரர்களின் அடிப்படையில், கனவு அணியை வெளியிடும். இதற்கு முன்பாகவே, இவர்கள் 5 பேர் உலக கோப்பையில் கட்டாயம் சிறப்பாக விளையாடி ஐசிசியின் கனவு அணியில் இடம் பெறுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தாலேக்கர் தெரிவித்துள்ளார்.
லிசா ஸ்தாலேக்கர் கணித்த கனவு அணியில் இடம் பெற கூடிய 5 வீரர்கள்:
- ஜஸ்பிரித் பும்ரா
- விராட் கோலி
- ஸ்டீவ் ஸ்மித்
- பாபர் ஆசம்
- ஷாஹின் அப்ரிடி