
ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசனுக்கான தனது முதல் போட்டியை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியானது இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த தொடரில், ஏற்கனவே நேபாளம் அணியை 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் புதிய உத்வேகத்துடன் இன்று இந்திய அணிக்கு எதிராக களமிறங்கத் தயாராக இருக்கும். இந்திய அணியோ ஆசிய கோப்பையில் தனது முதல் போட்டியை, அதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்கவே திட்டமிட்டிருக்கும்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும், தற்போது ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அசுர பலத்துடன் உள்ளது. இதனால், இந்திய அணி கட்டாயம் வெற்றியாக போராட வேண்டி இருக்கும். இருப்பினும், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்களாலும், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட அனுபவம் நிறைந்த பவுலர்களும் இந்திய அணியின் வெற்றிக்கு கைக்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான் அணியில் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்:
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (சி), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா , ஹரிஸ் ரவூப்.
ஆசிய கோப்பையில் IND vs PAK:
இதுவரை ஒருநாள் வடிவில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில், இந்த இரு அணிகளும் 13 முறை மோதி உள்ளன. இதில், இந்தியா 7லும், பாகிஸ்தான் 5லும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.