
சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து வீட்டுக்கு வருவதால் மீனா கறி, மீன் எடுத்து சமைக்கிறார். ஆனால் அவரது அம்மா மாப்பிள்ளை இங்கே வரக்கூடாது சண்டை போடுகிறார். உடனே மீனா கோபத்தில் அப்போ நானும் இந்த வீட்டை விட்டு கிளம்பறேன் என்று சொல்ல அவரது அம்மா வேறு வழியில்லாமல் சமைக்க சொல்கிறார். பின் மீனா அனைத்தையும் தடபுடலாக சமைக்க முத்து வந்து விடுகிறார். பின் முத்துவுக்கு மீனா சாப்பாடு பரிமாறி அப்போது மீனாவின் அம்மா அவசரப்படுத்த முத்து இன்னைக்கு நீங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று கேட்க சீத்தா அவருக்கு உடம்பு சரியில்லை என்று சமாளித்து விடுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த பக்கம் மனோஜ் ரோகிணியை தேடி பார்லருக்கு வர அங்கு அவர் இல்லாததால் உடனே கால் பண்ணி எங்கே என்று கேட்கிறார். பின் ரோகிணி வேறு ஒரு இடத்தில் இருப்பதாக சொல்ல மனோஜ் வீட்டுக்கு செல்கிறார். அங்கு விஜயாவிடம் தனக்கு வேலை போன விஷயத்தை சொல்ல அவர் வருத்தப்படுகிறார். மேலும் வட்டி கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.