விலை உயர்கிறது டாஸ்மாக் மதுபானங்கள் – கவலையில் குடிமகன்கள்..!

0
TASMAC
TASMAC

தமிழக அரசின் முக்கிய வருமானங்களில் ஒன்றாக டாஸ்மாக் உள்ளது. தமிழகத்தில் அரசே டாஸ்மாக் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 5300 கடைகளில் மதுபானம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் (பிப்ரவரி 7) உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டிற்கு 26 ஆயிரம் கோடி..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

தமிழக அரசு டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது. இது தமிழக அரசின் பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் டாஸ்மாக் மூலம் 31 ஆயிரத்து 500 கோடி வருமானம் தமிழக அரசிற்கு கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக 2017 ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுபான விலைகள் உயர்த்தப்பட்டது.

மீண்டும் விலை உயர்வு..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

புதிய பட்ஜெட் மற்றும் வருவாய் உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் படி அரசு டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு ரூ. 10ம், பீர் ஒன்றுக்கு ரூ.10 ம், புல் மதுபானம் ஒன்றிற்கு ரூ. 40ம் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தியால் மதுபான பிரியர்கள் அனைவரும் கவலையில் உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here