‘லிப்ட்’ படத்தின் ‘என்ன மயிலு சிரிச்சிகுனு’ பாடல் – பின்னி பெடல் எடுத்த சிவகார்த்திகேயன் & கவின் காம்போ!!

0

“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் கவினின் “லிப்ட்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

நடிகர் கவின்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான், நடிகர் கவின். இவர் தனது குறும்பான பேச்சு மற்றும் நடிப்பின் மூலமாக அதிக பெண் ரசிகர்களை கொண்டுள்ளார். இப்படியாக இருக்க, அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி – ஏப்ரல் 28ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம்!!

இவர் அங்கு ஆரம்பத்தில் நல்ல பெயர் எடுத்திருந்தாலும் பல பிரச்சனைகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கினார். ஆனாலும், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் உள்ளது. “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்கு பின் பல திரைப்படங்களில் கமிட் ஆனார். இப்படியாக இருக்க, இவர் “பிகில்” திரைப்படத்தின் மூலமாக பிரபலமான அம்ரிதாவுடன் “லிப்ட்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த திரைப்படத்தின் முதல் பாடலான “என்ன மயிலு” என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன், பூவையர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த பாடலை கவின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here