‘இப்படி புண்படுத்துறீங்களேப்பா’…,’லியோ’ திரைப்பட ட்ரெய்லரை வெளியிடுவதில் சிக்கல்!!

0
'இப்படி புண்படுத்துறீங்களேப்பா'...,'லியோ' திரைப்பட ட்ரெய்லரை வெளியிடுவதில் சிக்கல்!!
'இப்படி புண்படுத்துறீங்களேப்பா'...,'லியோ' திரைப்பட ட்ரெய்லரை வெளியிடுவதில் சிக்கல்!!

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்தது. இறுதியில், இந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது. இந்த ட்ரெய்லரை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டர் திரையரங்கு பார்க்கிங் பகுதியில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படி இருக்க, ‘லியோ’ திரைப்பட ட்ரைலரை ரோகிணி தியேட்டர் வளாகத்தில் திரையிட காவல்துறை ஆணையரை அணுக வேண்டும் என்று கோயம்பேடு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், ட்ரெய்லர் வெளியீட்டிலும் சிக்கல் எழுமோ என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here