தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா. செ. ஞானவேல் இயக்குகிறார். இதில் இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது லியோ படத்தில் வில்லனாக நடித்த நடிகர் சாண்டி மாஸ்டர் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். லியோ படத்தை காட்டிலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற இத மட்டும் பண்ணுங்க.., நீங்க கண்டிப்பா பாஸாகலாம்!!