அடடே இப்படியும்  பண்ணலாமா?? ஹோட்டலில் இதுக்கு கம்பளைண்ட் பண்ணா 15,000.., ஷாக் நியூஸ்!!

0
அடடே இப்படியும் பண்ணலாமா?? ஹோட்டலில் இதுக்கு கம்பளைண்ட் பண்ணா 15,000.., ஷாக் நியூஸ்!!
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட ஹோட்டலில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். அப்படிப்பட்ட ஹோட்டல்களில் பார்சல் வாங்கும் போது அரசின் உத்தரவுப்படி பாலிதீன் கவர்கள் கொடுக்கப்படுவதில்லை. கட்டாயம் வேண்டும் என்றால் விலை கொடுத்து ஒரு பையை ஹோட்டலே விற்று வருகிறது. அதில் சில ஹோட்டல்கள் தங்களது கடையின் லோகோவை அச்சடித்து விற்று வருகிறது. அந்த வகையில் கோவையில் ஒரு பிரபல ஹோட்டலில் ஷேக் முகமது என்பவர் ஒரு சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியுள்ளார்.
சிக்கன் ரைஸின் விலை 160 பார்சல் கவர் சேர்த்து 165 ரூபாய் வாங்கியுள்ளனர். இதை பார்த்த ஷேக் முகமது பார்சலில் உங்கள் கடை லோகோ எப்படி வைப்பீர்கள் என்று கூறி விளக்கம் கேட்டு ஹோட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம் எந்த பதிலும் கொடுக்காத நிலையில், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தன்னை ஏஜென்ட் போல் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வநத நிலையில் ஹோட்டல் மீது தவறு இருக்கிறது என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு 10,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவு சேர்த்து 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here