வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இனி வீடியோ காலில் இதையும் செய்யலாம்!!!

0
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்
இன்றைய நவீன காலகட்டத்தில் நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வந்ததிலிருந்து தூரத்தில் இருக்கும் ஒருவரிடம் தினமும் பேசி சந்தோஷப்படுகிறோம். இதனால் பயனர்களின் வசதிக்கேற்ப இந்த நிறுவனங்களும் அவ்வப்போது பல புது வசதிகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்கள் வியக்க வைக்கும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

அதாவது தூரத்தில் இருக்கும் ஒரு நபருடன் வீடியோ கால் பேசும் அம்சம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது இனி வரும் நாட்களில் வீடியோ காலில் பேசிக்கொண்டே இருவரும் தங்களுக்குப் பிடித்த பாடலையோ, ஆடியோவையோ சேர்ந்த கேட்கலாம் என்ற வசதியையும் விரைவில் கொண்டு வர உள்ளனர். இதற்காக மெட்டா நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை அனைத்து முடிவடைந்த நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here