மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கை அசிங்கப்படுத்திய Filpkart – கடும் எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள்!

0
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கை அசிங்கப்படுத்திய Filpkart - கடும் எதிர்ப்பு தெரிவித்த நெட்டிசன்கள்!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் படத்தை டிஷர்ட்டில் அச்சிட்டு விமர்சிக்கும் வசனங்களோடு ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் புது டிஷர்ட்:

பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வந்தவர் தான் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம் .எஸ் .தோனி – The Untold Story என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருப்பார். அந்த படத்தின் மூலம் அதிகமான ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொண்டார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி இவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவரின் உறவினர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த சம்பவத்தில் இருந்து இன்றும் ரசிகர்கள் மீள முடியாமல் இருக்கும் நிலையில் சுஷாந்த் சிங்கின் படத்தை டிஷர்ட்டில் அச்சிட்டு அதில் விமர்சிக்கும் வசனங்களோடு ஃப்ளிப்கார்ட் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதாவது சுஷாந்த் சிங்கின் புகைப்படத்தை வரைந்து அதில் ” depression is like drowing” என்று கேப்சன்‌ அச்சிடப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பேமஸ் ஜோடிக்கு வந்த கொலை மிரட்டல் – காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!!

இதனால் சுஷாந்த் சிங்கின் உறவினர்களும் மற்றும் ரசிகர்களும் கோபம் அடைந்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இறந்தவரை வைத்து லாபம் பார்க்கலாமா என கொந்தளித்துள்ளனர். இந்நிலையில் பலரும் இந்த டிஷர்ட்டை பதிவு செய்து கேப்ஷனில் ‘Boycott Filpkart’ என்ற ஹேஸ்டேகை டிரண்ட்‌ செய்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here