புகழ் பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் – இருளில் மூழ்கிய இந்திய திரையுலகம்!!

0

கொரோனா தொற்று மற்றும் நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலனின்றி இன்று (06-02-2022) உயிரிழந்தார்.

லதா மங்கேஷ்கர்:

20 மொழிகளுக்கும் மேல் பாடல்களை பாடிய பெருமை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேல் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகவே மும்பையில் பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றுக்கு லதா மங்கேஷ்கர் சிகிச்சை பெற்று வந்தார். 92 வயதான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக மாறிய நிலையில் இன்று காலமானார்.

லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவின் செய்யமுடியாத இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 30,000திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்தியாவின் இசை சாம்ராஜ்ஜியதை ஆண்ட லதா மங்கேஷ்கர் அவர்களின் இறப்பு ரசிகர்களுக்கு மிக பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திரை உலகினரும், ரசிகர்களும் லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here