அசத்தலான அப்டேட்களுடன் விற்பனைக்கு வந்தது கேடிஎம் பிஎஸ் 6 பைக்குகள் (KTM Duke மற்றும் RC 125, 200, 250, 390 CC BS 6)…!

0

கேடிஎம் நிறுவனம் தனது டியூக் (Duke) மற்றும் ஆர்சி (RC) ரக பைக்குகளை சில அசத்தலான மாற்றங்களுடன் பிஎஸ் 6 ரக என்ஜினோடு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அந்த விவரத் தொகுப்பை பார்க்கலாமா..!

கேடிஎம் டியூக் 125 & ஆர்சி 125 (KTM Duke, RC 125):

டியூக் 125 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 1.38 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 1.32 லட்சம் (ரூ. 5,541 விலை வேறுபாடு)
ஆர்சி 125 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 1.55 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 1.48 லட்சம் (ரூ. 6,527 விலை வேறுபாடு)

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

என்னென்ன மாற்றங்கள்..?

என்ஜின் – 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் பிஎஸ் 4 தரத்தில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் பிஎஸ் 6 ரக தரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 14.5 பிஎச்பி பவர் மற்றும் 12 என்.எம் டார்க் திறன் கொண்டுள்ளது. டியூக் 200 மாடலில் இடம்பெற்றுள்ள சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்புகள், டியூக் 125 பிஎஸ்6 மாடலில் இடம்பெற்றுள்ளன. வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

கேடிஎம் டியூக் 200 & ஆர்சி 200 (KTM Duke 200, RC 200):

டியூக் 200 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 1.73 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 1.62 லட்சம் (ரூ. 10,496 விலை வேறுபாடு)
ஆர்சி 200 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 1.97 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 1.91 லட்சம் (ரூ. 6,138 விலை வேறுபாடு)

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

என்னென்ன மாற்றங்கள்..?

கேடிஎம் டியூக் 250 மாடல்களில் உள்ள வடிவமைப்புகள் படி டியூக் 200 மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்ட புது மாடல்களில் அதிக அப்டேட்கள் கொண்ட மாடலாக டியூக் 200 உள்ளது. பிஎஸ் 4 மாடலில் 10.2 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிவாயு கலன், இந்த புதிய மாடலில் 13.5 லிட்டர் கொள்ளவு கொண்ட வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் எலெக்ட்ரானிக் ஆரஞ்சு மற்றும் செராமிக் வொயிட் ஆகிய புதிய வண்ணங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

பைக்கிற்கு புதிய பாடி பேனல்களும் வழங்கப்பட்டுள்ளதால் பிஎஸ்-6 ஆர்.சி 200 பைக் 2.3 கிலோ எடை கூடியுள்ளது. இந்த புதிய பிஎஸ்-6 200 டியூக் மாடலில் 199.5 சிசி எஞ்சின் உள்ளது. இது 25 பிஎச்பி பவர் மற்றும் 19.3 என்.எம் டார்க் திறனை வழங்கும். இது முந்தைய மாடலை விட 0.83 பிஎச்பி பவர் மற்றும் 0.2 என்.எம் டார்க் திறனை குறைவாக வழங்குகிறது. டியூக் 200 மற்றும் ஆர்சி 200ல் டூயல் சேனல் ஏபிஸ் அமைப்பு ஸ்டான்டர்டாக வழங்கப்பட்டுள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

கேடிஎம் டியூக் 250 (KTM Duke 250)

டியூக் 250 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 2.00 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 1.97 லட்சம் (ரூ. 3,328 விலை வேறுபாடு)

இந்த பைக்கில் 30 பிஎச்பி பவர் மற்றும் 24 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய 248.8 சிசி எஞ்சின் உள்ளது. இதில் புதிதாக சில வண்ணத்தேர்வுகள் மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் சூப்பர்மோட்டோ மோடு ஆகியவை ஸ்டான்டர்ட் அம்சமாக வழங்கப்பட்டுள்ளன.

கேடிஎம் டியூக் 390 & ஆர்சி 390 (KTM Duke 390, RC 390):

டியூக் 390 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 2.53 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 2.48 லட்சம் (ரூ. 4,716 விலை வேறுபாடு)
ஆர்சி 390 பிஎஸ் 6 புதிய விலை – ரூ. 2.48 லட்சம், பிஎஸ் 4 விலை – ரூ. 2.44 லட்சம் (ரூ. 4,061 விலை வேறுபாடு)

இந்த பைக்கில் உள்ள 373.சிசி சிங்கிள் சிலிண்டர் 4 வால்வு லிக்விடு கூல்டு எஞ்சின் மூலம் 43.5 பிஎச்பி பவர் மற்றும் 36 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இதில் புதிதாக அசிஸ்ட் & ஸ்ளிப்பர் கிளட்சு வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here