கேடிஎம் 390 அட்வென்சர் விற்பனைக்கு வந்தது – ரூ. 2.99 லட்சம்

0
KTM 390 Adventure

கேடிஎம் (KTM) நிறுவனம் அதன் சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களுக்காக பெயர்பெற்றது. தற்போது அட்வென்சர் பிரிவிலும் முதன் முறையாக இணைந்துள்ளது. கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கிற்கான புக்கிங் நாடு முழுவதும் உள்ள கேடிஎம் டீலர்சிப்களில் தொடங்கி உள்ளது. டெலிவரி அடுத்த மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

கேடிஎம் 390 அட்வென்சர் சிறப்பம்சங்கள்

என்ஜின் – 373.2 சிசி டி.ஓ.எச்.சி சிங்கிள் சிலிண்டர்
பவர் – 43 பிஎச்பி
டார்க் – 37 என்.எம்
கிரவுண்டு கிளயரன்ஸ் – 200 மிமீ
கியர்பாக்ஸ் – 6 ஸ்பீடு

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

டிரெல்லீஸ் சேசிஸ் கொண்டு இலகுவான எடையில் கேடிஎம் 390 அட்வென்சர் தயாரிக்கப்பட்டுள்ளது.
பைக்கின் முன்பக்கத்தில் WP long travel (170 மிமீ) சஸ்பென்ஷன் அமைப்பும், பின்பக்கத்தில் WP mono-shock (மோனோ-ஷாக் 177 மிமீ) அப்ஸபர்கள் வழங்கப்பட்டுள்ளன. நீளமான விண்டுஷீல்டு, எஞ்சின்களை பாதுகாக்கும் பேஷ் பிளேட், மெட்ஜீலர் டூயல் பர்பஸ் டயர்கள் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

இதிலுள்ள போத்-வே கியூக்‌ஷிஃப்ட்டர் சிறப்பசம் மூலம் வேகமாகவும், ஆக்ரோஷமான ரைடிங்கை பெறலாம். ஸ்மார்ட்போன் மூலம் பைக்கை இணைத்துக் கொள்ளும் வசதி, நாவிகேஷன் வசதி, டிஎஃப்டி திரை உள்ளிட்ட அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்

கேடிஎம் அட்வெஞ்சர் 390 பைக்கில் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம் உள்ளதால், வேகமாக செல்லும் போது, மிகவும் பாதுகாப்பான பயண அனுபவத்தை பெற முடியும். இதிலுள்ள எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம், குறுகிய ஆங்கிள் சென்ஸிடிவ்-ஐ போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த சாதனம் உதவும்.

இந்த பைக்கின் விலை ஆனது ரூ. 2.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்தது ராயல் என்பீல்ட் ஹிமாலயன் BS6 – எவ்வளவு தெரியுமா??

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here