நாடு முழுவதும் காலியாக உள்ள 5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்படுமா..?

0

மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை நாடு முழுவதும் உள்ள காவல்துறை குறித்து ஆய்வு நடத்தி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கும். அதன்படி இந்த வருட ஆய்வில் நாடு முழுவதும் 5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரியவந்து உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் – 25 லட்சத்து 95 ஆயிரத்து 435 பணியிடங்கள்
தற்போது பணியில் உள்ள போலீசார் எண்ணிக்கை – 20 லட்சத்து 67 ஆயிரத்து 270 போலீசார்

பெண் போலீசார் 8.98 சதவீதம்..!

நாடு முழுவதும் 1,85,696 பெண் போலீசார் பணியில் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 8.98 சதவீதம் ஆகும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அனுமதிக்கப்பட்ட ஆயுதப்படை போலீசார் எண்ணிக்கை – 10 லட்சத்து 98 ஆயிரம் பணியிடங்கள்
தற்போது பணியில் உள்ள ஆயுதப்படை போலீசார் – 9 லட்சத்து 99 ஆயிரம் போலீசார்
ஆயுதப்படையில் உள்ள பெண் போலீசார் எண்ணிக்கை – 29,532 பேர் (2.95 சதவீதம்)

தமிழகம், புதுவையில் எவ்வளவு..?

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட போலீசார் பணியிடங்கள் – 1,24,719 பணியிடங்கள்
தற்போது பணியில் உள்ளோர் எண்ணிக்கை – 1,10,186 போலீசார்
புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட போலீசார் பணியிடங்கள் – 4,462 பணியிடங்கள்
தற்போது பணியில் உள்ளோர் எண்ணிக்கை – 3,458 பேர்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இந்தியாவில் 1 லட்சம் மக்களுக்கு 198.65 போலீசார் என்ற எண்ணிக்கையே மக்கள் தொகைக்கு நிர்ணயிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை ஆகும். ஆனால் 1 லட்சம் மக்களுக்கு 158.22 போலீசார் என்ற விகிதத்திலேயே தற்போது போலீசார் உள்ளனர். எனவே தற்போது காலியாக உள்ள போலீசார் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here