ஆள பாத்தா டம்மி பீசா தெரியுது., ஆனா T20 போட்டியில இப்படி ஒரு சாதனை பன்னிருக்காரே., இந்திய வீரருக்கு குவியும் வாழ்த்து!!

0
ஆள பாத்தா டம்மி பீசா தெரியுது., ஆனா T20 போட்டியில இப்படி ஒரு சாதனை பன்னிருக்காரே., இந்திய வீரருக்கு குவியும் வாழ்த்து!!
ஆள பாத்தா டம்மி பீசா தெரியுது., ஆனா T20 போட்டியில இப்படி ஒரு சாதனை பன்னிருக்காரே., இந்திய வீரருக்கு குவியும் வாழ்த்து!!

நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 போட்டியில் இந்திய அணி தோற்றாலும், அதே அணியை சேர்ந்த கே.எல்.ராகுல் புதிய சாதனையை படைத்துள்ளார்.

ராகுலின் புதிய சாதனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 71 ரன்களும், கே.எல் ராகுல் 55 ரன்களும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 211 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்.., போட்டி போட்டுக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள்!!

அதாவது நேற்றைய போட்டியில் 35 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் மூன்று சிக்சர் மற்றும் நான்கு ஃபவுண்டரி உட்பட 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சர்வதேச T20 போட்டியில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த 2 வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதனை தொடர்ந்து 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற இடத்தில் விராட் கோலி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here