இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்.., போட்டி போட்டுக்கொண்டு வரும் தயாரிப்பாளர்கள்!!

0
Shankar At The 2.0 Trailer Launch

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை இயக்குனர் சங்கர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2:

இரண்டு வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இயக்குனர் சங்கர் ராம் சரண் நடிக்கும் ஆர் சி 15 படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அந்த படத்தில் சங்கர் பிசியாக இருப்பதால் அவருடைய சிஷ்யர்களான வசந்த பாலன், அறிவழகன் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் உதவியை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கமல் இந்த வாரத்தில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி படத்தின் மீதம் இருக்கும் காட்சிகளை படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் மிகுந்த தொகையை சங்கர் குறைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லைக்கா நிறுவனம் அந்த தொகையை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்களாம். இதனை தொடர்ந்து படப்பிடிப்புக்காக சென்னையில் இருக்கும் சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரசாத் லேபிள் பிரமாண்ட செட் ஒன்றை அமைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here