டிக் டாக் புகழ் ஜி பி முத்துவை, இருசக்கர வாகனத்தில் உட்கார வைத்து அதி வேகமாக பைக்கை இயக்கிய சர்ச்சையில், சம்பந்தப்பட்டவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
போலீஸ் வழக்கு பதிவு :
சமீப தினங்களாக, YouTube தளங்களில் பல பிரபலங்கள் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டிக் டாக் பிரபலமான, ஜிபி முத்து திட்டுவதை கேட்பதற்கென்று, ஒரு கூட்டம் உள்ளது. இவர் வரப்போகும் பிக் பாஸ் 6 ல் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த நிலையில் இவர் சில தினங்களுக்கு முன், YouTube பிரபலமான TTF வாசன் என்பவருடன் சேர்ந்து, கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரைடிங் சென்றார். அப்போது வாசன், பைக்கை அதிவேகமாக இயக்கினார். கையை விட்டு, பைக்கை ஒட்டி சாகசங்கள் செய்து காண்பித்தார். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
பிக் பாஸ் 6ல் என்ட்ரியாகும் ரவுடி பேபி – என்னங்க., இப்படி அதிரடி பிரபலமா களத்துல இறங்குறாங்க?
இதையடுத்து வாசன் மீது கோவை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த ஜி பி முத்துவுக்கு, இந்த புகார் தற்போது மிகப்பெரிய சோதனையாக மாறி உள்ளது. இதனால் இவர், பிக் பாஸில் கலந்து கொள்வாரா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.