கோலாகலமாக நடந்த கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி திருமணம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!

0
கோலாகலமாக நடந்த கே.எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!
கோலாகலமாக நடந்த கே.எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை இன்று திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமண புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாலிவுட் நடிகைகளை காதலித்து திருமணம் செய்து வரும் நிகழ்வு இயல்பாக மாறிவிட்டது. அந்த வகையில் விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா, மனீஷ் பாண்டே – அஷ்ரிதா ஷெட்டி, ஹர்திக் பாண்ட்யா – நடாஷா என பல கிரிக்கெட் – சினிமா ஜோடிகளை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல் ராகுலும் தற்போது இணைந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் இன்று திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். KL ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் நடிகை அதியா ஷெட்டியின் தந்தையும் நடிகருமான சுனில் ஷெட்டியின் கடலா பண்ணை வீட்டில் இன்று நடைபெற்றுள்ளது.

முரட்டு சிங்குலுக்கு பிரேக் போட்டு திடுதிப்புனு கல்யாணத்த முடிச்ச பிரேம்ஜி.., பொண்ணு யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here