கிங் கப் ஆப் சாம்பியன்: முதல் காலிறுதியில் வென்ற ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி!!

0
கிங் கப் ஆப் சாம்பியன்: முதல் காலிறுதியில் வென்ற ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி!!
கிங் கப் ஆப் சாம்பியன்: முதல் காலிறுதியில் வென்ற ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி!!

கிங் கப் ஆப் சாம்பியன் தொடரின் முதல் காலிறுதி போட்டியில் அல் நாஸ்ர் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் ABHA அணியை வீழ்த்தி அசத்தி உள்ளது.

அல் நாஸ்ர் அணி:

சவுதி அரேபியாவில் பிரபலமான கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே, லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில், ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி 7 போட்டிகளில் விளையாடி, 4ல் வெற்றி, 1ல் டிரா மற்றும் 2 ல் தோல்வி அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, கிங் கப் ஆப் சாம்பியன் தொடரில் அல் நாஸ்ர் அணி கவனம் செலுத்தி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த தொடரின் காலிறுதி வரை முன்னேறி உள்ள அல் நாஸ்ர் அணி, நேற்று ABHA அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே, அல் நாஸ்ர் அணியின் சமி அல்-நஜீ கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இவரை தொடர்ந்து, அப்துல்லா அல்-கைபரியும் கோல் அடிக்க, ஆட்டத்தின் முதல் பாதியில் அல் நாஸ்ர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

IND vs AUS ODI: எங்கு? எப்போது? இந்திய அணியில் யார் யாருக்கு இடம்…, போட்டிக்கான முழு விவரம் உள்ளே!!

இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், அல் நாஸ்ர் அணியின் முகமது மாறன் 49 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ABHA அணியின் அப்துல்பத்தா ஆதம் 69 வது நிமிடத்தில் கோல் அடித்து, அணிக்கு ஆறுதல் அளித்தார். இதனால், ஆட்ட நேர முடிவில் ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணியின் 3-1 என்ற கோல் கணக்கில் காலிறுதியின் முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here