IND vs AUS ODI: எங்கு? எப்போது? இந்திய அணியில் யார் யாருக்கு இடம்…, போட்டிக்கான முழு விவரம் உள்ளே!!

0
IND vs AUS ODI: எங்கு? எப்போது? இந்திய அணியில் யார் யாருக்கு இடம்..., போட்டிக்கான முழு விவரம் உள்ளே!!
IND vs AUS ODI: எங்கு? எப்போது? இந்திய அணியில் யார் யாருக்கு இடம்..., போட்டிக்கான முழு விவரம் உள்ளே!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான போட்டிகள் குறித்த முழு விவரத்தையும் இப்பதிவில் காணலாம்.

IND vs AUS:

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதன்படி, விளையாடி முடித்துள்ள டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, வரும் 17ம் தேதி தொடங்க உள்ள ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்ல இன்று முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடர், மார்ச் 17, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மும்பை, கடப்பா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதனை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம். இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை, ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் வழி நடத்த உள்ளனர். இவர்களில், ரோஹித் முதல் போட்டியில் இருந்து மட்டும் விலகி உள்ளதால், ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு தலைமை தாங்க உள்ளார். இந்திய அணி இந்த வருட தொடக்கத்தில் இருந்து, ஒரு தொடரையும் இழக்க வில்லை என்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றது.

WPL 2023: தோல்வியே சந்திக்காத மும்பை இந்தியன்ஸ்…, பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து அசத்தல்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமட். ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். இதில், ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை கேள்வி குறியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here