கேஜிஎப் யாஷ் பர்த்டே – 5000 கிலோவில் கேக்

0
Yash Birthday

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் மார்க்கெட்டை உலகளவுக்கு கொண்டு சென்றவர் யாஷ். கன்னட திரையுலகில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.  அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

கின்னஸ் சாதனை கேக்

யஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உருவாக்கிய 5000 கிலோ பிரம்மாண்ட கேக்குக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் ரசிகர்கள் அந்த சான்றிதழ் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்ட ராக்கிங் ஸ்டார் யஷ், 5000 கிலோவில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார்.

புது போஸ்டர்

ராக்கிங் ஸ்டார் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எஃப் படக்குழு மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த செகண்ட் லுக் போஸ்டர் தற்போது இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here