‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்’ – கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம்!!

0

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டங்களால் கேரளா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ள்ளது.

வேளாண் சட்டம்:

சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கான 3 விதிமுறைகளை அறிவித்திருந்தது. இதனை கண்டித்து விவசாயிகள் டெல்லியில் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. மேலும் போராட்டத்தின் போது விவசாயிகள் பலர் தங்களது உயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து மற்றும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று கூறி கேரளா முதலைமைச்சர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில் அவர் கூறியதாவது வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்தால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மேலும் இந்த வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. விவசாயிகளுக்கு அவர்களுக்கு தேவையான மற்றும் நியாயமான விலையை வழங்குவதில் மத்திய அரசு தவறிவிட்டது. இது மிகவும் வருத்தத்திற்குரியதே என்று கூறியுள்ளார்.

சீனாவில் மற்றொரு கொரோனா தடுப்பூசி தயார் – சினோபார்ம் நிறுவனம் அறிவிப்பு!!

மேலும் அவர் கூறியதாவது மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்களை நடைமுறை படுத்தினால் குறிப்பாக கேரளா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் கேரளாவில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே மத்திய அரசு விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடுவது பற்றி பேசுவதை விட இந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கான செயலில் ஈடுபட வேண்டும் என்று தனது தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த தீர்மானம் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here